35 பெண்கள் வன்கொடுமை - நீதிமன்றம் விதித்த தண்டனை !

35 பெண்களை வன்கொடுமை செய்த நபருக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் அரங்கேறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில், கடந்த 2014 முதல் 2019 வரையில் செல்லோ அப்ரம் மாபுன்யா என்ற அந்த கொடூர குற்றவாளி சுமார் 36 வீடுகளை இரவு நேரங்களில் உடைத்து கொள்ளை அடித்துள்ளான்.

அதுமட்டுமின்றி, 35 பெண்களை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் வன்கொடுமை செய்துள்ளான்.

இதையடுத்து கொடூர குற்றவாளியை பிடித்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த, அவனுக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது 5 ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை அந்நாட்டின் பிரிட்டோரியா உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.   

See the source image