பசுமாட்டை திருடி இறைச்சியாக்கிய காவாலிகள்.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட கேப்பை இன பசுமாட்டை திருடி இறைச்சியாக்கியுள்ளதாக மாட்டின் உரிமையாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வாதாரமாக வளர்க்கும் கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கும் சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினமும் (13) உருத்திரபுரம் 10 ம் வாய்க்கால் பகுதியில் வீட்டில் கட்டிவிடப்பட்டிருந்த உயர் ரக பசுமாட்டினை களவாடி உருத்திரபுரம் பொதுமயானத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்திற்குள் வெட்டி இறைச்சியாக்கி விட்டு பசுமாட்டின் தலை, தோல்களை விட்டு சென்றுள்ளனர்.

சுமார் 80000 ரூபா பெறுமதிக்கு மேலான குறித்த பசுமாடு தற்சமயம் பால் தருகின்ற நிலையில் இறைச்சியாக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார், அன்மைய நாட்களாக ஆடு,மாடு, கோழிகள் என்பன தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad