மரணத்தின் பின்னும் இரண்டு இளைஞர்களுக்கு உயிர் கொடுத்த யாழ் இளைஞன்.

உயிரிழந்த பிறகும் இருவரை வாழவைத்த யாழ். இளைஞன்! யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையின் மத்தியில் கடந்த 12 திகதி இரு இளையவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் வைத்தியர் ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய உரையாடலில் தெரிவித்தது, யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மத்தியிலும், மிக வளங்கள் குறைந்த நிலையிலும் இந்த சத்திர சிகிச்சை உண்மையிலேயே ஒரு யாழ்.போதனா வைத்தியசாலை பெறுத்தவரை வடநாட்டில் இதுவே முதல்முறையாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இணுவில் பகுதியில் 9ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கராஜா பிரிஞ்சன் என்ற இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது இரண்டு சிறுநீரகங்களும் தானம் வழங்கப்பட்ட நிலையில், இயந்திரங்களின் உதவியுடன் உயிர்வாழ்ந்த இரண்டு சிறுநீரக நோயாளிகளிற்கு பொருத்தப்பட்டது.

இந்நிலையில் சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வந்த இளைஞனின் பெற்றோருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
அந்த இளைஞனின் புகைப்படம் இருந்தால் comment இல் பதிவிடுங்கள்.

நல்லதை பகிர்வோம். நல்லதே செய்வோம்.