யாழில் இடம்பெற்ற விபத்தில் இதயம் வெடித்து மரணமான இளைஞன்.

யாழ். கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் இடம்பெற்ற விபத்தில், இதயம் வெடித்தே இளைஞன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் நேற்று (17) முடிவாகியுள்ளது.

சாவகச்சேரி நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட பணிப்பிற்கு அமைய யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை நிபுணர் ஜே. மதராஜ் மேற்கொண்ட பரிசோதனையில் அடிப்படையில் குறித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தினாலேயே இதயம் வெடித்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவருடைய இறுதி நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக தமது பிள்ளையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-எமது ஆழ்ந்த இரங்கல்கள்-
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad