10ஆயிரம் வாங்கி பாலியல் தொழில் பெண்களுக்கு 1000 ரூபா கொடுக்கும் ஆட்டொக்காரர்கள்.


இலங்கையில் பாலியல் தொழில் சட்டமாக்கப்படுவதை தான் விரும்புவதாக சர்ச்சைக்குரிய கருத்தொன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன (Kokila Gunawardena) வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எனது மனசாட்சிக்கு அமைய நான் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுகிறேன். பெண் என்ற வகையில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதை நான் எதிர்க்கின்றேன்.

தனிப்பட்ட ரீதியில் பாலியல் தொழில் சட்டமாக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.

உலகில் புத்த பகவானின் காலத்தில் இருந்தே பாலியல் தொழில் இருந்து வருகிறது என்பதே இதற்கு காரணம். இது உலகில் மிகவும் பழமையான தொழில்.

தற்போது என்ன நடக்கின்றது..? பாலியல் தொழில் செய்யும் பெண்கள் சுரண்டப்படுவதில்லையா?. முச்சக்கர வண்டி சாரதி முதல் சம்பந்தப்பட்ட அனைவரும் அந்த பெண்ணை சுரண்டி சாப்பிடுகின்றனர்.

தனது உடலை விற்பனை செய்ய விரும்பும் பெண்களுக்கு, அதனை சட்டத்திற்கு அமைய செய்ய அனுமதித்தால், அப்பாவி பெண்கள் கஷ்டத்தில் விழ மாட்டார்கள்.

துன்புறுத்தல்களுக்கு உள்ளாக மாட்டார்கள். அவர்கள் தமது குடும்பம், பிள்ளைகளை காப்பாற்றி கொண்டு வாழ்வார்கள்.

பெண்களிடம் மேற்கொள்ளப்படும் இந்த சுரண்டலை நிறுத்த முடியும் என நான் தெளிவாக நம்புகிறேன். பெண் என்ற வகையில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதை நான் எதிர்க்கின்றேன்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்த உரிமைகளை வழங்குமாறு நான் கூறவில்லை.

பெண்கள் என்ற வகையில் கிராமங்களில் இருக்கும் அப்பாவி பெண்களை அழைத்துச் சென்று விற்பனை செய்யும் நபர் 10 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொண்டு, அந்த பெண்ணுக்கு வெறும் ஆயிரம் ரூபாவை வழங்குவதை நான் எதிர்க்கின்றேன் எனவும் கோகிலா குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad