பற்றையில் இறந்து சடலமாக இருந்த 12 வயதுச் சிறுமி 2 மாத கர்ப்பிணி!! கரு கலைக்க முற்பட்ட போது தான் இறந்துள்ளார் !

முல்லைத்தீவு, மூங்கிலாறில் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார். சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமிக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். உடையார்கட்டு – மூங்கிலாறு கிராமத்தில் வசித்து வந்த யோகராசா நிதர்ஷனா, தனது வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற வேளையில், கடந்த 15ம் திகதி காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து, உறவினர்கள் சிறுமியை தேடிய போதிலும், சிறுமி கிடைக்காததை அடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.எனினும், ஆரம்பகட்ட விசாரணைகளில் சிறுமியை கண்டுபிடிக்க முடியாது போயுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். எனினும், குறித்த சிறுமி இறுதியாக சென்ற சகோதரியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவிலுள்ள, கைவிடப்பட்ட காணியிலிருந்து சிறுமியின் சடலம், உருக்குலைந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 720 156 146 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.