ஒட்டு மொத்த தமிழர்களின் மானத்தை வாங்கியவன் இவன் தான்: 29 வயதில் 84 வயது மூதாட்டியை வல்லுறவு செய்துள்ளான்

மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் பொதி விநியோக சேவையில் ஈடுபடும் சாரதியான தமிழர் ஒருவரை ரொறொன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. டிசம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவு 12:53 மணியளவில் ஸ்கார்பரோவின் கோல்ஃப்டேல் கார்டன் பகுதியில் உள்ள கிரீன்ஹோல்ம் சேர்க்யூட் மற்றும் லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் பதிவாகியுள்ளது. 84 வயதான பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​​​ஒருவர் அவரது கதவைத் தட்டியுள்ளார்..

அந்த தமிழ் இளைஞர், முதலில் மிக நட்பாக பேசி, வீட்டின் உள்ளே நுளைந்த பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தனது வேனில் ஏறி தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த பிரவீன் ‘பாபி’ குமார் (29) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒரு குடியிருப்பினுள் நுளைந்தது, தாக்குதல், வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

பொதி விநியோக சேவை சாரதியான பிரவீன், மேலும் பல இடங்களில் கைவரிசை காண்பித்திருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர். இவர் தொடர்பில் மேலதிக தகவல் ஏதாவது தெரிந்தவர்கள், தம்மை தொடர்பு கொள்ளுமாறு ரொறொன்ரோ பொலிசார் கேட்டுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad