வடஇந்தியாவில் துப்பாக்கி கலாச்சாரம் சகஜமான ஒன்றாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், சில நேரங்களில் திருவிழாக்கள் அல்லது தனிப்பட்ட கொண்டாட்டங்களின் போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது அடிக்கடி நிகழும் சம்பவமாக இருக்கிறது. அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பது தெரிந்தும் பலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் வடஇந்தியாவில் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் இது போன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பதிவாகி இருக்கிறது.
இந்த முறை துப்பாக்கி சுடும் சர்ச்சையில் சிக்கி இருப்பவர் ஒரு பெண் என்பவர் தான் கடும் அதிர்ச்சி தர கூடிய விஷயம். தனது பர்த்டே பார்ட்டியில் பெண் ஒருவர் தெருவில் கைத்துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. கொண்டாட்டங்களின் போது துப்பாக்கியால் சுடுவது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயலாக பார்க்கப்படும் நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடும் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
அந்தப் பெண்ணின் பிறந்தநாளை அவர் மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது போல் காணப்படுவதால், இந்த காணொளி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ குறிப்பிட்ட வைரல் வீடியோவில் தோன்றும் பெண்ணின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. அவர் தனது பிறந்தநாளை மிகவும் பொறுப்பற்ற மற்றும் பாதுகாப்பற்ற முறையில் கொண்டாடி உள்ளதை வீடியோ வெளிப்படுத்துகிறது.
*नगर कोतवाली क्षेत्र के राम लीला टिल्ला निवासी युवक आकाश डाहरिया व उसकी बहन का फaयरिंग का वीडियो हो रहा वायरल।*@muzafarnagarpol @Uppolice @dgpup @WasimAkramTyagi @zoo_bear @sakshijoshii @Samriddhi0809 @IsmatAraa pic.twitter.com/lcUHzHF3BZ
— I stand with innocent always, (@MKandhalvi) December 23, 2021
இந்த வீடியோ இரவு நேரத்தில் மின்விளக்கு ஒளிகளுக்கு மத்தியில் மிகவும் குறுகிய பாதையில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பின்னால் ஒருவரும், முன்னால் ஒருவரும் நிற்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த பெண் தனக்கு முன்னால் இருப்பவரிடம் ஏதோ சிரித்தபடி கூறி விட்டு, சட்டென்று தனது வலது கையில் உயர்த்தி பிடித்திருக்கும் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுகிறார். பின்னணியில் பார்ட்டி மியூசிக் ஒலித்து கொண்டிருக்கிறது. அவர் துப்பாக்கியால் சுட்ட பிறகு மக்கள் நடந்து செல்வதை வீடியோவில் காணலாம். குறிப்பாக அவர் துப்பாக்கியால் சுட்ட சந்து மிகவும் குறுகலாக இருப்பதாலும், இருபுறமும் வீடுகள் சூழ்ந்திருப்பதாலும் பெண்ணின் இந்த செயல் மிக ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து உள்ளூர் போலீசாரின் கவனத்திற்கு இந்த வைரல் வீடியோ கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் பொறுப்பற்ற செயலுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். . குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ட்விட்டரில் ஷேரான இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள் பெண்ணின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு கடுமையான விமர்சனங்களையும் பதிவிட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.