வெடிகுண்டுகளுடன் மதுபான விடுதிக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதி! 6 பேர் மரணம்

காங்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள பெனி நகரில் மதுபான விடுதி ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது வெடிகுண்டு தாக்குதல் நட்த்திய பயங்கரவாதியால் 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (24-12-2021) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மதுமான விடுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

இதன்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் மதுபான விடுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது அங்கிருந்த பொலிஸார் அவரை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தினார்.

இதனையடுத்து குறித்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. இதில் தற்கொலைப்படை பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

இதேவேளை, இந்த குண்டு வெடிப்பில் இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad