விவாகரத்து வழக்கில் விபரீத தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் 9999 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் குறைத்த நபருக்கு எதிராக மனைவி தொடர்ந்த விவகாரத்து வழக்கில், 8,000 ஆண்டுகளிற்கு அவர் இஸ்ரேலை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நோம் ஹப்பர்ட் என்ற 44 வயதான குறித்த நபர், தனது குழந்தைகளின் பராமரிப்பு செலவாக 3.34 மில்லியன் டொலர்கள் செலுத்தும் வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையை அவர் செலுத்தா விட்டால், 31 டிசம்பர் 9999 வரை இஸ்ரேலை விட்டு வெளியேற முடியாது எனவும் தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அவுஸ்திரேலியாவை செர்ந்தவரான நோம் ஹப்பர்ட் என்பவர், அந்த நாட்டில் வசித்து வந்த இஸ்ரேலைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அவர்களிற்குள் பிரிவு ஏற்பட்டதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மனைவி, இஸ்ரேலிற்கு சென்றுவிட்டார். எனினும் நோம் ஹப்பர்ட்டால் பிள்ளைகளை பிரிந்திருக்க முடியவில்லை.

மனைவி இஸ்ரேலுக்கு சென்ற ஒரு வருடத்தின் பின்னர், அங்கு சென்று, பிள்ளைகளுடன் நெருக்கமாக இருக்க அவர் விரும்பினார். இதன் காரணமாக 2012 இல் அவர் இஸ்ரேல் சென்றதும், அவர் மீது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

2013 இல் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.குழந்தைகளிற்கு 18 வயதாகும் வரை, அவர் மாதாந்தம் 5 ஆயிரம் இஸ்ரேலிய ஷேக்கல்கள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 3.34 மில்லியன் டொலர்கள் பணம் வழங்க வேண்டும், அதை வழங்காத பட்சத்தில் 8,000 வருடங்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி அவர், 31 டிசம்பர் 9999 வரை இஸ்ரேலை விட்டு வெளியேற முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “2013 முதல், நான் இஸ்ரேலில் அடைக்கப்பட்டிருக்கிறேன். இஸ்ரேலிய பெண்களை திருமணம் செய்து கொண்டதால் மட்டுமே இஸ்ரேலிய ‘நீதி’ அமைப்பால் துன்புறுத்தப்பட்ட பல வெளிநாட்டவர்களில் தானும் ஒருவன் என அவர் கூறினார்.

மேலும் ஒரு மருந்து நிறுவனத்திற்கான பகுப்பாய்வு வேதியியலாளர் ஹப்பர்ட், “இந்த உயிருக்கு ஆபத்தான அனுபவத்தை அனுபவிக்கும் மற்ற ஆஸ்திரேலியர்களுக்கு உதவுவதற்காக” தனது கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் கூறினார்.

இதேவேளை இஸ்ரேலில், விவாகரத்துச் சட்டம் என்பது, பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கான உதவித் தொகையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பெண்கள் தங்கள் குழந்தைகளின் தந்தையின் மீது பயணத் தடை விதிக்க கோரலாம் எனவும் கூறப்படுகின்றது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad