லண்டனுக்கு உள்ளே மட்டும் லாக் டவுன் போடவும்: விஞ்ஞானிகள் கோரிக்கை முன் வைப்பு !

சற்று முன்னர்(14.12.2021) அதிகாலை கிடைக்கப் பெற்ற தகவல் அடிப்படையில், முழு பிரித்தானியாவிலும் 6,097 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 4,174 பேர் லண்டனுக்குள் வசிக்கும் நபர்கள். இதனால் முழு பிரித்தானியாவிலும், லண்டனுக்கு உள்ளே தான் ஒமிக்ரான் வைரஸ் கடுமையாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து. லண்டனை மட்டும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர(Lock-Down)  வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் வேண்டு கோள் விடுத்துள்ளார்கள். இதனை அரசு உடனே செய்யா விட்டால் ஒமிக்ரான் பல்கிப் பெருகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். விஞ்ஞானிகள் கூறுவது போல லண்டனை மட்டும் லாக் டவுனுக்குள் கொண்டு வருவது தொடர்பாக, பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.  Source : experts call for London-only Lock down : Omicron now makes up 40% of all new Covid cases in London and will be dominant by TOMORROW:

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad