ஆடைகளை கழற்றச் சொல்லி சிறுமியை வீடியோ எடுத்த நடிகை

ஆடைகளைக் கழற்றச் சொல்லி சிறுமியை வீடியோ எடுத்து கொடுமைப்படுத்திய நடிகையை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகர் பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 25 வயது இளம்பெண் தனியாக வசித்து வருகிறார். அவர் நடிகை என்று சொல்கிறார்கள். இவர் தனது வீட்டு வேலைகளை செய்வதற்காக ஒரு சிறுமியை பணியமர்த்தி இருக்கிறார்.

அந்த சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என்றும், குறித்த நேரத்தில் வேலையை செய்யாமல் இருக்கிறார் என்றும் சொல்லி அவரை சித்திரவதை செய்திருக்கிறார். சொன்ன நேரத்தில் அந்த சிறுமி வேலையை செய்யவில்லை என்று சொல்லி அந்த சிறுமியை தாக்கியிருக்கிறார்.

அத்தோடு விடாமல் அந்த சிறுமியை ஆடைகளை கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கி இருக்கிறார். அதன்பின்னர் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து விட்டு, வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்.

அந்த சிறுமி தனது தலையில் அடிபட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனை சென்றிருக்கிறார். அங்கே சென்ற சிறுமியின் சகோதரி, காயம் குறித்து கேட்டபோது, அவர் தனக்கு நடந்த கொடுமையை சொல்லி அழுதிருக்கிறார். இது அடுத்து இருவரும் சென்று போலீசில் புகார் சொல்ல, சிறுமியின் புகாரின்பேரில் போலீசார் அந்த நடிகையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Top Post Ad

Below Post Ad