வேறு ஒருவருடன் தொடர்பு – மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்ட கணவர்

வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடனேயே சென்றுவிட்ட மனைவியை சமாதானம் பேசி அழைத்து வந்திருக்கிறார் கணவர். ஆனாலும் அவர் அடிக்கடி ஏற்பட்ட தகராறில் மனைவி தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு அவரை படுகொலை செய்திருக்கிறார் கணவர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருக்கும் தம்பிக்கோட்டை அடுத்த கீழக்காடு பகுதியைச் சேர்ந்த இந்துமதி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணம் வரை சென்றிருக்கிறது.

செல்லத்துரை – இந்துமதி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்று இருக்கிறார். இதை சகித்துக் கொண்ட கணவர் செல்லதுரை, பிள்ளைகளுக்காக நீதிமன்றம் மூலம் மனைவியை மீட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனாலும் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு .

வேறு ஒருவருடன் ஒடியது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு -வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் விரக்தி அடைந்த இந்துமதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த ஆய்மலை பகுதியில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவியை அழைத்து வர வேண்டும் என்பதற்காக அங்கு சென்று இருக்கிறார் செல்லத்துரை. அதனால் போகும்போது குடிபோதையில் சென்றிருக்கிறார் அப்போது செல்லத்துரை குடும்பம் நடத்த முடியாது என்று இந்துமதி பிடிவாதமாக சொல்ல ஆத்திரத்தில் அங்கிருந்த அம்மிக் கல்லை எடுத்து தன் தலையில் தூக்கிப் போட்டு இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்லதுரையை கைது செய்து கொலை தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.