“தன்னை புதைக்க சவக்குழி தோண்டிய பெண்!”…. பிரேசிலில் கொடூர சம்பவம்….!!

பிரேசிலை சேர்ந்த அமன்டா அல்பாக் என்ற 21 வயது இளம்பெண் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று Florianopolis என்ற நகரில் இருக்கும் தன் நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட சென்றிருக்கிறார். அதன்பின்பு, அவரை காணவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

அதனைத்தொடர்ந்து, கடந்த 3 ஆம் தேதியன்று சாண்டா கேடரினா கடற்கரைப் பகுதியில் அமன்டா சடலமாக தான் கண்டறியப்பட்டார். இது தொடர்பில், இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவரான புருனோ பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளதாவது, அமன்டா, பிறந்தநாள் விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் சாண்டா கேடரினாவிற்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு சிலர் போதைப் பொருள் விற்பனை செய்து கொண்டிருந்துள்ளனர்.

அதனை பார்த்த அமன்டா அவர்களை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. எனவே, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைதானார். அவர், நாங்கள் மூவரும் சேர்ந்து தான் அமன்டாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தோம் என்று ஒப்புக் கொண்டார். அதன் பின்பு, அமன்டாவை புதைக்க அவரையே சவக்குழியை தோண்ட வைத்தோம் என்றும் கூறியிருக்கிறார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad