அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்னும் நகரத்தில் லாரன்ரே என்ற இளம்பெண் தன் குடியிருப்பிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது, வாசலில் வந்து நின்ற பிட்புல் நாயை பாசத்துடன் அணுகியுள்ளார். அப்போது அவரின், வளர்ப்பு நாய் ஓடி வந்து அவரின் அருகில் நின்றது.
அந்த நாய்க்குட்டி மீது, பிட்புல் நாய் வேகமாக பாய்ந்து நடிக்க முயற்சித்தது. தன் நாயை காப்பாற்றுவதற்கு முயன்ற லாரன்ரே-வையும் அந்த நாய் கடிக்க முயற்சித்தது. அந்த சமயத்தில், பிரபல இணையதள நிறுவனத்தில், பொருட்கள் டெலிவரி செய்யக்கூடிய பெண்ணொருவர், அந்த நாயிடமிருந்து அந்த பெண்ணையும், நாய்குட்டியையும் காப்பாற்றியிருக்கிறார்.
உலகிலேயே மிக ஆபத்தான நாய் பிட்புல் தான். அந்நாய், மனிதர்கள், மிருகங்கள் என்று பாரபட்சமின்றி வாயில் கவ்வ தொடங்கி விட்டால் உயிர் போகும் வரை விடாது. இந்த நாயால், கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து 2014ஆம் வருடம் வரை, அமெரிக்காவில் சுமார் 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 203 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே, காப்பாற்றிய அந்த இளம்பெண்ணிற்கு, அந்நிறுவனம், பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.