“டேய் நான் இந்த காலேஜ்லதான் பிஎச்.டி. படிக்கிறேன் என்னை விடுடா” -கல்லூரி காம்பௌண்டுக்குள் மாணவிக்கு நேர்ந்த கதி

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் பிஎச்.டி. படித்து வரும் மாணவி ஒருவர் வளாகத்தின் கிழக்கு வாசல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 11.45 மணியளவில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது ஒரு வாலிபர் ஒரு பைக்கில் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தார் .ஆனால் அந்த மாணவி அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வாக்கிங் போனபோது ,அந்த வாலிபர் அந்த பெண்ணை வழி மறித்து ஆபாசமாக பேசினார் .அதன் பிறகு அந்த பெண்ணை அங்குள்ள ஒரு புதருக்குள் தரதரவென்று இழுத்து சென்றார் ,அந்த பெண் சத்தம் போட்டு கத்த விடாமல் அவரின் வாயை பொத்தி ,அவரை அந்த புதரில் கீழே தள்ளினார்.

பின்னர் அவரின் ஆடைகளை உருவி , அவரிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார் .அதன் பிறகு அந்த பெண் அவரிடமிருந்த தப்பி ஓடிவிட்டார் .பின்னர் இரவு 12.45 மணியளவில் போலீஸ் உதவி எண்ணுக்கு போன் செய்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அவர் புகார் கூறினார் .உடனே போலீஸ் படை அந்த இடத்திற்கு விரைந்து வந்து ,அந்த சம்பவம் பற்றி அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அந்த பெண் அந்த நபரை தன்னால் அடையாளம் காமிக்க முடியுமென்று கூறியதும் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்