டேக்மேனிஸ்தான் நாட்டில், சுமார் 230 அடி சுற்றளவில் எரி குழி ஒன்று உள்ளது. கடந்த 1971ம் ஆண்டு தொடக்கம் அது எரிந்த வண்ணம் உள்ளதோடு. மீதேன் வாயுவையும் அது கக்கிய வண்ணம் உள்ளது. குறித்த இடத்தை நரகத்தின் வாசல் என்று அழைப்பார்கள். இது உலக அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் குழியை உடனே மூடுமாறு, அன் நாட்டு அதிபர் திடீரென அறிவித்துள்ளார். அது அதிக அளவில் மீதேன் வாயுவை வெளியே கக்கிய வண்ணம் உள்ளது. இதனால் காற்று மாசு பட்டு வருகிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதனை எப்படி மூடுவது என்பது பெரும் சவாலான விடையம். 230 அடி சுற்றளவு கொண்ட இந்தக் குழி, எந்த அளவு ஆளம் என்பது யாருக்கும் தெரியாது. புகைப்படங்கள் கீழே இணைப்பு: