இலங்கை அரசிடம் தங்கமும் இல்லை- மத்திய வங்கியின் அறிக்கையால் பெரும் குளறுபடி !

2021ம் ஆண்டு டிசம்பர் மாத தங்கத்தின் கையிருப்பு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, இலங்கை மத்திய வங்கி கூறியுள்ள பதில் பெரும் கோக்கு மாத்தாக உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தில் 175.4 மில்லியன் டாலர் பெறுமதியான தங்கம் குறைவடைந்துள்ளதாக பதில் தந்திருக்கிறது இலங்கை மத்திய வங்கி. இதனால் இலங்கை அரசு கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று, அமெரிக்க டாலர்களாக மாற்றி வருகிறதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஏன் எனில் இலங்கை மத்திய வங்கியிடம் எத்தனை மில்லியன் டாலர்கள் பெறுமதியான தங்கம் கையிருப்பில் உள்ளது என்பது இதுவரை யாருக்கும் சரியாக தெரியாது என்பதே உண்மை. கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்றால், நாடு மேலும் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. .. இது இவ்வாறு இருக்க…

இலங்கையை காப்பாற்றுகிறோம் என்று கூறி தற்போது சீன வெளியுறவு அமைச்சர் கொழும்பு வந்துள்ளார். அதிரடியாக அவர் பல திட்டங்களை அறிவிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியா பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு தலையில் துண்டைப் போடும் அளவுக்கு மோடி அரசு தள்ளப்பட்டுள்ளது. காரணம் இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் உள்ளது, சீனா உதவவில்லை. இனி இந்தியா பக்கமே சாயவேண்டும் என்று மோடி அரசு கனவு கண்டு கொண்டு இந்த நிலையில். சீனா இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad