“எரிபொருள் விலையேற்றம் எதிரொலி!”…. கலவர பூமியாக மாறிய கஜகஸ்தான்…. அமைதிப்படையை அனுப்பும் ரஷ்யா…..!!

சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து வந்த நாடான கஜகஸ்தானில், புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. எனவே, மக்கள் இந்த விலையேற்றத்தை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறது.

போராட்டக்காரர்கள் மேயர் அலுவலகத்திற்கு தீ வைத்தார்கள். எனவே பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறு நாடு முழுக்க கலவரம் வெடித்தது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலத்த காயமடைந்தனர்.

400 நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நிலைமை மோசமடைந்ததால், அரசு ராஜினாமா செய்தது. எனவே, அதிபர் காசிம் ஜோமார்ட் டோகோயேவ், நாடு முழுக்க அவசர நிலை பிரகடனம் செய்வதாக உத்தரவிட்டார். பொதுமக்கள் ஒன்று கூடவும் தடை அறிவிக்கப்பட்டறது.

எனினும், நிலைமை மாறவில்லை. இந்நிலையில், அதிபர் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இயங்கும் 6 முன்னாள் சோவியத் நாடுகளிடம் உதவி கேட்டிருக்கிறார். எனவே, சி.எஸ்.டி.ஓ. என்ற அந்நாடுகளின் கூட்டமைப்பு, அமைதிப்படையை கஜகஸ்தான் நாட்டிற்கு அனுப்ப அனுமதி வழங்கியிருக்கிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad