மூளையில் வைக்கப்பட்ட ‘சிப்’…. முதல் டுவிட்டை பதிவு செய்த முதியவர்…. ஆஸ்திரேலியாவில் அதிசயம்….!!!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிலிப் (வயது 62) என்ற முதியவர் பல ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் மூளையில் ‘மைக்ரோசிப்’ ஒன்று பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவருடைய சிந்தனைகள் தற்போது எழுத்து உருவம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மைக்ரோசிப் உதவியுடன் முதல்முறையாக பிலிப் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூளையில் வைக்கப்பட்டுள்ள ‘மைக்ரோசாப்’ உதவியுடன் டுவிட் பதிவு செய்த முதல் நபர் என்ற பெருமை இந்த முதியவருக்கு கிடைத்துள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad