குஜராத்தின் வதோதராவில் உள்ள புதிய விஐபி சாலையில் ஒரு சொகுசு பேருந்து அனாதையாக நின்று கொண்டிருந்தது .அந்த பேருந்தை இரவு நேரத்தில் பல பலான வேலைகளுக்கு சமூக விரோத கூட்டம் பயன்படுத்தி வந்துள்ளது .அதன் படி கடந்த ஜனவரி 2 ஆம் தேதி ஒரு 16 வயதான பெண் அந்த சாலை வழியாக தனியே நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது மூன்று வாலிபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை அந்த பேருந்துக்குள் இழுத்து சென்றனர் ,பின்னர் அதில் 17 வயதான வாலிபர் அந்த பெண்ணை அந்த பேருந்துக்குள் வைத்து பலாத்காரம் செய்ய ,மற்ற இரண்டு நண்பர்கள் அந்த பேருந்தை வெளி பக்கம் பூட்டி விட்டு காவல் காத்தனர் .
அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு,இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டி அனுப்பி விட்டனர் .ஆனால் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய உறவினரிடம் கூறியதும் ,அதை கேட்டு கொதித்த அந்த உறவினர் அங்குள்ள போலீசில் சென்று புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து , குற்றம் சாட்ட பிரதான குற்றவாளி வாலிபரை கைது செய்தனர் . அதே நேரத்தில் அவரது மற்ற இரண்டு நண்பர்களையும் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.