1000 ஆண்டுகள் பழைமை… “6 குழந்தைகள், 2 பெண்கள்”… மொத்தம் 14 மம்மிகள் கண்டுபிடிப்பு..!!

பெரு நாட்டின் தலைநகர் லிமா என்ற இடத்திற்கு அருகில் உள்ள காஜாமார்க்கில்லா என்ற பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது ஒரு இடத்தில் தோண்டும்போது “மம்மி” எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 குழந்தைகள் உடல் என்றும் மற்றும் 2 பெண்கள் உடல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டின் பாரம்பரியத்தின் படி இறந்தவர்கள் வாழ்க்கை,அதோடு முடிவதில்லை என்றும் அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பிறந்து வாழ்க்கையை தொடர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையினால் இறந்தவர்களின் உடலை எரிக்காமல் அல்லது புதைக்காமால் பதப்படுத்தி பாதுகாத்து வந்தார்கள். அவ்வாறாக பதப்படுத்தப்பட்டு களிமண் பானை ஆகியவற்றில் வைத்து பூமிக்குள் புதைக்கப்பட்டன. தற்போது இந்த உடல்கள் பல 100 ஆண்டுகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.