“அடேங்கப்பா!”…. இத்தனை கோடியா…? நில மோசடி வழக்கில் கைதான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்…!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசீர் பூட்டோவினுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆசிப் அக்தர் ஹாஷ்மி. இவர் எவாகியு என்ற சொத்து அறக்கட்டளையினுடைய தலைவராக இருந்த போது, குஜராத்தில் 13.5 கோடி ரூபாய் மதிப்புடைய 13 கனல் பிரதம நகர்ப்புற நிலத்தை ஆக்கிரமித்ததாக தற்போது புகார் எழுந்திருக்கிறது.

எனவே, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு படையான எப்.ஐ.ஏ-யை சேர்ந்தவர்கள் அவரை கைது செய்திருக்கிறார்கள். மேலும், இதே போல மத்திய அரசிற்குரிய 12 நிலங்களை ஆக்கிரமித்து, மோசடி செய்த வழக்குகளில் இவருக்கு தொடர்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad