ராஜாங்க ரீதியான முயற்சி தொடரும்…. இரு நாட்டு தலைவர்களின் ஆலோசனை….!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா தங்களது வீரர்களை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது என்று அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.தற்போது உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ரஷியா படையெடுக்கும் என்றால் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தெரிவித்துள்ளன. இதனால் ரஷியா, உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இம்முயற்சியில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர். அதில் “இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு உக்ரைனில் நிலவும் போர் பதற்றத்தைத் தடுப்பதாகவும், இருநாட்டு தலைவர்களும் உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய உரிமை பற்றிய தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எந்த ஒரு மாற்றத்தையும் படைகளைக் கொண்டு வலுக்கட்டாயமாக நடத்தினால் ஏற்கமாட்டோம். மேலும் ராஜாங்க ரீதியான முயற்சி மற்றும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்வோம். இதனையடுத்து இந்தோ பசிபிக் பகுதியில் சுதந்திரமான செயல்பாடுகள் நடைபெற இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் ராணுவ ரீதியாக ஒருங்கிணைந்து செயலாற்றும்” என தெரிவித்துள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad