“எங்களுக்கு உறுதியான பங்காளி இவங்கதான்”…. தட்டுப்பாட்டில் தவிக்கும் இலங்கை…. கைக்கொடுத்து தூக்கிய இந்தியா….!!

இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது மிகவும் கடுமையானதாக நிலவுகிறது. இந்த கட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இந்தியா இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை இன்று வினியோகம் செய்தது.

இதுபற்றி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் “இலங்கையின் உறுதியான பங்காளி மற்றும் உண்மையான நண்பனாகவும் இந்தியா அமைந்துள்ளது. மேலும் இந்திய தூதர் என்று எண்ணெய் கழகத்திடம் இருந்து 40,000 டன் எரிபொருளை இலங்கையிடம் ஒப்படைத்தார்” என்று கூறப்பட்டது. இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியாவிற்கு வர உள்ள நிலையில் தான் இந்த உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad