யாழில் 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம் – 32 வயது இளைஞன் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு – குடாரப்பு கிராமத்தில் 10 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. குறித்த மாமுனையை சேர்ந்த இளைஞன் மீது சிறுவனின் தந்தை பொலிஸாரிடம் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.