டியூஷன் வந்த மாணவிக்கு மது குடிக்க வைத்து வாத்தியார் செய்த காரியம்..

டியூஷன் படிக்க வந்த மாணவியை ஆசிரியர் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

டியூஷன் படிக்க வந்த மாணவியை ஆசிரியர் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

மற்ற எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தாய் தந்தைக்கு அடுத்து குரு தெய்வமாக மதிக்கும் நாடு நம் நாடு, அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து அவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர் அவர்கள் மீது தங்களது பாலியல் வக்கிரத்தை கட்டவிழித்து விட்டு வருகின்றனர். மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, பாலியல் உறவுக்கு அழைத்து சித்திரவதை செய்வது, போன்ற கொடூரங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் டியூஷன் வந்த மாணவியை குடிக்க வைத்து ஆசிரியர் தவறாக பயன்படுத்த முயற்சித்துள்ளார் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விவரம் பின்வருமாறு:- குஜராத் மாநிலம் வதோதரா  நிஜாம்புரா பகுதியைச் சேர்ந்தவர்  பிரசாந்த் கோஸ்லா, இவர் பள்ளி மாணவர்களுக்கு டிவிஷன் சென்டர் நடத்திவருகிறார், இவரிடம் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கின்றனர், இவர் வீட்டுக்கு அருகிலேயே கொட்டகை அமைத்து டியூஷன் நடத்தி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இவருக்கு அதில் படிக்கும் ஒரு மாணவி மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

அந்த மாணவியை எப்படியாவது அடைய வேண்டுமென பிரசாந்த் கோஸ்லா திட்டமிட்டார், இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதற்கான வாய்ப்பு ஏற்பட்டது மாணவியை தனியாக தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவர், தனது படுக்கை அறையில் வைத்து அந்த மாணவியை மது குடிக்க வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அந்த மாணவி சம்மதிக்கவில்லை, பின்னர் வலுக்கட்டாயமாக அந்த மாணவியின் வாயில் மதுவை ஊற்றியுள்ளார். அதில் சிறுமி மயக்கம் ஏற்பட்டது, அப்போது அந்த சிறுமியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

பின்னர் காரியம் முடிந்ததும் அந்த மாணவியை அவரது வீட்டுக்கு அருகில் விட்டுச் சென்றுவிட்டார் பிரசாத், தனது மகள் வித்தியாசமாக நடந்து கொள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், அந்த பெண்ணிடம் விசாரித்தனர், அப்போது அந்த மாணவி தனக்கு நடந்தவற்றை கூறினார், இதனையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டியூஷன் வாத்தியார் மீது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியரை கைது செய்துள்ளனர். 


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad