காதலனுடன் நீர்வீழ்ச்சி பார்க்க சென்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது யுவதியின் சடலம் மீட்பு!

கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட காதலனுடன் சென்ற வேளையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை நித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சித்துமினி சுகன்யா என்ற யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதி தனது காதலனுடன் நாவலப்பிட்டி கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட பின்னர், வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் நாவலப்பிட்டியில் அன்றைய தினம் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் சிக்கினர். யுவதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இளைஞன் வெள்ளத்திலிருந்து மீண்டார்.

நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன யுவதியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கலபொட ஓடையின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதாலும் கலபொட நீர்வீழ்ச்சியில் இருந்து மகாவலி ஆற்றில் நீர் பாய்ந்ததாலும் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

கலபொட ஓடையில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, யுவதியின் உறவினர்களுடன் நாவலப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சடலம் காணப்பட்ட இடத்திற்குச் சென்றுள்ளனர். காணாமல் போன யுவதியின் உடலை உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad