ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!

முல்லைத்தீவு பகுதியில் பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஐஸ் எனப்படும் போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில் இரண்டு இளைஞர்களை நேற்று 05.08.2022 பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

22 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினை சேர்ந்த இளைஞன் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 21 அகவையுடைய உண்ணாப்பிலவு வடக்கினை சேர்ந்த இளைஞன் 4கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருட்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவில் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இந்த ஐஸ் போதைப்பொருளின் தாக்கம் பற்றி பெற்றோர்கள் அறிந்துகொள்ளவேண்டும்

கிரிஸ்டல் மெத் அல்லது ஐஸ் என்பது பளிங்கு ஃபடிக மெத்தம்பேட்டமைனின்(Crystal methamphetamine) பொதுவான பெயர், இது மனித உடலில் மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு வலுவான போதை மருந்தாகும். இதற்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எவ்விதமான பயன்பாடும் இல்லை.

மெத் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் சக்திவாய்ந்த பரவசம் பயன்படுத்துபவர்களை அதன் ஆரம்ப கட்ட பாவனையில் இருந்தே அதற்கு அடிமையாக்கிவிடுகிறது.

இதனை பயன்படுத்தப்படும்போது, டோபமைன் (Dopamine) எனப்படும் ஒரு வேதிப்பொருள் மூளையின் பகுதிகளை அதன் தாக்கத்தில் மூழ்கடித்து மகிழ்ச்சி போன்ற தற்காலிக உணர்வினை அளிக்கிறது. அதனை அவர்கள் புதிய ஆற்றல் ஒன்றினை பெறுவதாக உணர்கிறார்கள்.

இதனை பாவிக்கும் ஒருவரை மிக விரைவில் அடிமையாக்குவதோடு இந்த போதையை மறுபடியும் அடைவதற்கு அவர்களை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டுகிறது.

அவர்கள் மெத் அல்லது ஐஸ் இனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவர்களிற்கு ஒரு சகிப்பு தன்மையை உருவாக்கிவிடுகின்றது.

அதாவது, அதே குறித்த அளவு போதை உயர்வைப் பெற அவர்களுக்கு அக்கட்டத்தில் முந்திய அளவை விட அதிக அளவு மெத் தேவைப்படுகிறது. அதிக அளவு மெத் என்பது அதிகரித்த ஆபத்து என்பதையே குறிப்பிடுகிறது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad