யாழில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி பெண் தவறி விழுந்து மரணம்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்தார். காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணித்துக் கொண்டு இருந்தவேளை அவர் திடீரென தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஜெயந்தன் வேதப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக புகைப்படங்களுக்கு 👉👉Click Here 

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.