யாழ் நவாலியில் இளைஞனை துரத்தி துரத்தி வாளால் வெட்டிய காவாலிகள்.

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று விட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை நவாலி சம்பந்தப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை குழு வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வீதியில் ஓடிய போதிலும் துரத்தி துரத்தி சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad