யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 20 வயது பிரான்ஸ் இளைஞன் கைது.

15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பாிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸில் வசிக்கும் கல்வியங்காட்டை சோ்ந்த 20 வயதான இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னா் யாழ்ப்பாணம் வந்துள்ளாா்.

பின்னா் அச்சுவேலி பகுதியை சோ்ந்த 15 வயதான சிறுமியுடன் காதல் உருவான நிலையில் சிறுமியை திருமணம் முடித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளாா்.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் அச்சுவேலி பொலிஸாரால், காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு குறித்த முறைப்பாடு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், சிறுமியையும் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.