தனியார் வங்கியில் உஷா வேலை பார்த்து வந்தார். அப்போது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரை சேர்ந்த ஐ.டி. கால் சென்டர் ஊழியர் அஜித்குமார் (26) என்பவருடன் உஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வங்கி பெண் ஊழியருடன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளத் தொடர்பில் உள்ள வாலிபரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக மற்றொரு கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துதுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள சாமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி உஷா (37). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உஷா கடந்த 8 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். உஷா அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உஷா வேலை பார்த்து வந்தார். அப்போது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரை சேர்ந்த ஐ.டி. கால் சென்டர் ஊழியர் அஜித்குமார் (26) என்பவருடன் உஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் உஷா கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள வங்கி கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் காவேரிப்பட்டணத்திற்கு அடிக்கடி வந்து சென்ற அஜித்குமாருக்கும், உஷாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மது குடித்து விட்டு வந்து அவர் உஷாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மத்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (40) என்பவருக்கும், உஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அப்போது, உஷாவுக்கும், அஜித்குமாருக்கும் கள்ளதத்தொடர்பு விஷயம் ஆறுமுகத்திற்கு தெரியவந்தது. இதனையடுத்து, ஆறுமுகம் உஷா உடனான கள்ளத்தெதாடர்பை கைவிடுமாறு மிரட்டியுள்ளார். ஆனால், இதனை பெரிதாக கொடுத்துக்கொள்ளாமல் அஜித் கள்ளதத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் ஆறுமுகத்திற்கும், அஜித்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதனிடையே, நேற்று முன்தினம் மதியம் காவேரிப்பட்டணம் வந்த அஜித்குமார் உஷா பணிபுரிந்து வரும் வங்கிக்கு சென்று அவரது ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு வெளியே சென்றார். அந்த நேரம் அஜித்குமார் வந்த தகவலை அறிந்த ஆறுமுகம் தனது கூட்டாளிகளான காத்தவராயன் (31), பார்த்திபன் (32), சக்திவேல் (40), கிருஷ்ணமூர்த்தி (63) ஆகியோருடன் காரில் வந்து அஜித்குமாரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அவரை வழிமறித்த ஆறுமுகம் உள்பட 5 பேரும் அஜித்குமாரை தாக்கி காரில் ஏற்றி கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது, அவ்வழியாக சென்றவர்கள் தடுத்ததோடு இது குறித்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆறுமுகம் உள்பட 5 பேரிடம் இருந்து அஜித்குமாரை மீட்டனர். அவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவை இருந்தன. அஜித்குமாரை கடத்தி கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.