யாழில் 103 லட்சம் ரூபாய் மோசடி செய்த அரச ஊழியர் கைது.

ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் யாழ் விற்பனை நிலையத்தின் பொறுப்பதிகாரியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளது.

10 மில்லியனுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர், சந்தேக நபர் கூட்டுத்தாபனத்தின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் போது அரசாங்கத்திற்கு பெற வேண்டிய பணப் பத்திரங்களை மாற்றியமைத்து மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த இந்த மோசடி தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ரூ.10,329,480 மோசடி செய்யப்பட்டுள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.