வீதியில் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்..!

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சடலம் குறித்த பகுதியில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் அறிவுறுத்தலுக்கமைவாக பொதுமக்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad