யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய களமிறங்கும் கனடா தமிழர்கள்.

கனடாவில் வசிக்கும் சில இலங்கையர்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றுலா சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.

குறிப்பாக காரைநகர் பிரதேசத்தை சுற்றுலாவுக்கு உகந்த இடமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை அவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுதவிர நெடுந்தீவு, மன்னார், கற்பிட்டி, கொழும்பு மற்றும் காலி முதல் திருகோணமலை வரையான கடல்சார் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.