பள்ளி மாணவி மீது ஆசை! கோவிலில் மாணவிக்கு ஆசிரியர் செய்த காரியம்!

பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். உன்னை திருமணம் செய்து கொண்டு ராணி போல நன்றாக வைத்து பார்த்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சில் மாணவியும் மயங்கினார்.

ஆசைவார்த்தை கூறி 12ம் வகுப்பு பள்ளி மாணவியை திருமணம் செய்து கொண்ட ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டல் பகுதியை சேர்ந்த சலபதி (33). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அதே பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். உன்னை திருமணம் செய்து கொண்டு ராணி போல நன்றாக வைத்து பார்த்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சில் மாணவியும் மயங்கினார். 

இந்நிலையில், பள்ளியில் நடந்த இறுதித் தேர்வு முடிந்ததும், அந்த மாணவியை திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். திருமணம்  நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்து மாணவி அதிர்ச்சியடைந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது. 

ஆசிரியர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அறிந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்  சலபதி மீது கங்காவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சலபதி மீது போக்சோ பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad