வவுனியாவில் மணப்பெண் தாயாராலும் மாப்பிள்ளையின் தந்தையாலும் நின்ற திருமணம்.

வவுனியாவில் 21 வயதான இளம் யுவதியின் திருமணப்பதிவு நிகழ்வு மாப்பிளையின் தந்தையின் திருவிளையாடலால் குழம்பியுள்ளது.

முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த 27 வயதான இளைஞனுக்கு வவுனியாவைச் சேர்ந்த யுவதியை திருமணத்தரகர் மூலம் பேசி திருமணம் நிச்சயித்துள்ளார்கள்.

யுவதியும் இளைஞனும் கடந்த 4 மாதங்களாக தொலைபேசியில் கதைத்து வந்துள்ளார்கள். இந் நிலையில் கனடாவிலிருந்து வவுனியா வந்து திருமணப் பதிவு மற்றும் திருமணம் முடிப்பதற்காக ஆயத்தமான நேரத்தில் பெண்ணின் தாயுடன் மாப்பிளையின் தந்தை இது தொடர்பாக பல தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்துள்ளார்.

பெண்ணின் தாயார் கணவனை இழந்தவராவார். மாப்பிளையின் தந்தை தொடர்ந்து பெண்ணின் தாயுடன் கதைத்து வந்த நிலையில் இது தொடர்பாக மாப்பிளையின் தாய்க்கு சந்தேகம் வந்துள்ளது.

அத்துடன் திருமண நிச்சயத்திற்கு என தெரிவித்து 4 லட்சம் பணமும் பெண்ணின் தாய்க்கு மாப்பிளையின் தந்தை அனுப்பியதால் மாப்பிளையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் கனடாவில் சண்டை தொடங்கியதாகத் தெரியவருகின்றது.

இதன் தொடர்ச்சியாக திருமணப் பதிவு நாளுக்கு ஒரு மாதம் முன்னதாகவே மாப்பிளையின் தந்தை கனடாவிலிருந்து வவுனியா வந்து தங்கியிருந்துள்ளார்.

தாயார் இது தொடர்பாக தனது மகனுடன் கலந்தாலோசித்து தந்தையை உடனடியாக கனடா திரும்புமாறு கூறியதால் அவர்களுக்கு இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மாப்பிளையின் தாயார் பெண்ணின் தாயை கடுமையான முறையில் தொலைபேசியில் ஏசியதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து இருவீட்டு திருமண நிச்சயார்த்தமும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மணமகளின் தாயாரால் வவுனியாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad