செயலாளர் மனைவிக்கு அழுகிய இறைச்சி.ஹரி ஹோட்டலுக்கு சீல்.

இறைச்சி மிகவும் பழுதடைந்துள்ளது. இது தொடர்பாக கடையில் பொறுப்பாக நின்றவரிடம் கூறிய போது குறித்த நபர் செயலாளரின் மனைவியை அச்சுறுத்தியதுடன் ”நீ எங்கு சென்றாலும் எங்களை ஒன்றும் புடுங்க முடியாது” என சண்டித்தனத்தோடு கதைத்துள்ளார்.

இதனையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேற்கொண்ட முறைப்பாட்டின் மூலம் குறித்த ஹோட்டல் அன்று இரவே முற்றுகையிடப்பட்டது. அங்கு பழுதடைந்த இறைச்சிகள் மற்றும பழுதடைந்த உணவுப் பொருட்கள் காணப்பட்டு கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று குறித்த ஹோட்டல் சீல் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாட்டு நடாத்தும் இவ்வாறான ஹோட்டல்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad