தாமரைப் பூ பறிக்க சென்ற இளைஞன் பலி !

 முல்லைத்தீவு – தாமரைக்குளம் ஏரியில் தாமரை பறிக்க படகில் பயணித்த இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் படகில் பயணித்த போது படகில் இருந்த ஓட்டையிலிருந்து நீர் கசிந்து படகு மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு முல்லைத்தீவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்தார்.

சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad