ஊசி போட்ட பின் உடல் நீலமாகி துடிதுடித்து உயிரிழந்த இளம்பெண்!

 வயிற்றில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பேராதனை வைத்தியசாலைக்கு வந்த 21 வயதுடைய யுவதிக்கு இரண்டு ஊசி போடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பேராதனை வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த சாமுதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஏழாவது வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று (12) காலை தாதி ஒருவர்இரண்டு ஊசி மருந்துகளை செலுத்திய போது இந்த யுவதி வலியால் அலறி துடித்ததாகவும், பின்னர் கழிவறைக்குச் சென்று வாந்தி எடுத்து சிறிது நேரத்தில் உயிரிழந்ததாகவும் அவரது தாயார் மாயா இந்திராணி தெரிவித்தார்.

ஊசி செலுத்திய பின்னர் சிலர் உயிரிழப்பதாக அண்மையில் தகவல் பரவி வரும் நிலையில், இதே போன்ற மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad