யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டே வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.
சம்பத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரை உயிரிழந்துள்ளார்.