நீதிமன்ற காவலில் இருந்த கஞ்சாவை விற்ற அரச அதிகாரி கைது!

 மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் (19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருத்த 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை திருடி இன்று (19) காலை விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாகவே மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை திருடி விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக நீதிமன்ற கட்டுகாவலில் உள்ள சான்று பொருட்களான போதை பொருட்கள் திருடி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதே நேரம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்படும் போதை பொருட்கள் இவ்வாறு பல வருடங்களாக திருடி விற்பனை செய்யப்படுவதாகவும் சான்று பொருளாக காணப்படும் ஐஸ் போதை பொருளும் திருடி விற்பனை செய்து அதற்கு பதிலாக அஜினாமோல்ட் கலந்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad