யாழில் காதலர் தினத்திற்கு கள்ளக்காதலியை காண வந்த சுவிஸ் அங்கிள் நையப்புடைப்பு.

யாழ் அரியாலைப் பகுதியில் சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் நையப்புடைக்கப்பட்டுள்ளர். இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரியாலைப் பகுதியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவருடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்த குறித்த குடும்பஸ்தரே குடும்பப் பெண்ணின் கணவனான் வாகன உரிமையாளர் மற்றும் அவனது நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

அரியாலையைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் சுவிஸ்லாந்திலிருந்து ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழமை. இவ்வாறு வந்து செல்லும் போது தனது துாரத்து உறவினரான ஹயஸ் வாகன உரிமையாளரின் வாகனத்தையே வாடகைக்கு பெற்று திரிவதை வழமையாகக் கொண்டிருந்துள்ளார்.

இந் நிலையில் குறித்த வாகன உரிமையாளரின் மனைவியான 35 வயதான இரு குழந்தைகளின் தாயாரான அரச ஊழியருடன் சுவிஸ் குடும்பஸ்தர் இரகசிய தொடர்பை பேணியுள்ளார். இதனை கண்டு பிடித்த வாகன உரிமையாளர் தனது மனைவியின் தொலைபேசி வட்சப் மற்றும் வைபர் app களை தனது கணனியில் நிறுவி மனைவிக்கும் சுவிஸ் குடும்பஸ்தருக்கும் இருக்கும் தொடர்பாடல்களை அவதானித்து வந்துள்ளார்.

காதலர் தினத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு தனியே வருவேன் என சில நாட்களுக்கு முன் சுவிஸ் குடும்பஸ்தர் வட்சப் மூலம் பெண் அரச ஊழியருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் பின்னர் கடந்த 9ம் திகதி யாழ்ப்பாணம் வந்துள்ளார். இந் நிலையில் காதல் தினத்தில் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு யாழில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு வருமாறு வட்சப் மூலம் கள்ளக்காதலிக்கு தகவல் கொடுத்திருந்தார். அதனையடுத்து அந்த தகவல்களை எல்லாம் ஆதாரங்களாக சேகரித்த வாகன உரிமையாளர் இன்று காலை சுவிஸ் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் புகுந்து அவரை நையப்புடைத்ததாக தெரியவருகின்றது.

சுவிஸ் குடும்பஸ்தர் தங்கியிருந்த வீட்டில் அவரது தங்கை குடும்பமே வசித்து வந்துள்ளது. தங்கை மற்றும் அவரது கணவனும் அரச ஊழியர்களாவார். பாடசாலைக்கு தங்கையின் பிள்ளைகள் சென்ற பின்னர் குறித்த சுவிஸ் குடும்பஸ்தர் தனியே இருந்த சமயமே வீடு புகுந்து வாகன உரிமையாளரும் அவரது கூட்டாளிகள் இருவரும் குடும்பஸ்தரை அரை மணிநேரமாக தாக்கியுள்ளார்கள்.

சுவிஸ் குடும்பஸ்தரையும் வாகன உரிமையாளரையும் அயலவர்களுக்கு நன்றாக தெரிந்த காரணத்தால் அயலவர்கள் அடிப்பதை நிறுத்தச் செய்து நடந்தவற்றை விசாரித்துள்ளார்கள். அதன் பின்னர் சுவிஸ் குடும்பஸ்தரின் திருவிளையாடல்கள் அவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

அயலவர்களின் வேண்டுகோளின் பின் வாகனச்சாரதியும் அவனது கூட்டாளிகளும் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்கள். அதன் பின்னர் சுவிஸ் குடும்பஸ்தரை தனியார் வைத்தியசாலையில் அயலவர்கள் அனுமதித்ததாக தெரியவருகின்றது

இதே நேரம் வாகன உரிமையாளரின் மனைவியும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் குடும்பஸ்தரின் சகோதரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக தற்போது யாழ்ப்பாண பொலிசாரிடம் முறையிட ஆயத்தமாகி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad