யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் கோயில் திருவிழாவில் தாலி அறுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு நடந்த 10 நிமிடங்களுக்குள் இரண்டு பெண்களும் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னாதிட்டியில் அமைந்துள்ள காளி கோயிலில் இன்று தேர்த்திருவிழா நடந்தது. பெண்ணொருவர் அணிந்திருந்த ரூ.6 இலட்சம் மதிப்புள்ள தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு இரண்டு பெண்கள் கூட்ட நெரிசலில் தலைமறைவாகியுள்ளனர்.
அங்கு சிவில் உடையில் கடமையிலிருந்த யாழ் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு, கோயில் இளைஞர்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி, இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த குளிர்பான போத்தலுக்குள் தாலிக்கொடி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
புத்தளத்தை சேர்ந்த 35 வயதான இரண்டு பெண்களே மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இவர்கள் கடந்த வருடம் நல்லூர் கோயிலிலும் நகை திருடிய சந்தேகத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். விடுவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.