தாயை கட்டாய உறவுகொண்ட 20 வயது இளைஞன் கைது.

 59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் நேற்று (6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவர் கடந்த 4 ஆம் திகதி தனது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்துள்ளதாகவும் அவருக்கு எதுவும் நினைவில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதே வேளை மகன் தன்னை வல்லுறவுக்குள்ளானததை தாயார் முதலில் மறுத்தார் எனவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad