தோட்ட கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயது லக்சிகா.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் இன்று (18 ) உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான தவரூபன் -லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மோட்டரை இயக்க முயற்சித்தபோது துயரம்
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று (17.03) மாலை கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போ யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர்.

பதறியடித்த அயலவர்கள் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெர்வித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad