யாழ்ப்பாணம் – இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சிற்றம்பலம் பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதன்போது அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.