நாகர்கோவில்: குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, தனது படிப்பிற்காக பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து 12ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். ஆரல்வாய்மொழி பாரதிநகரை சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. இதனால் பிரகாஷ் அவரது பாட்டி வீட்டிற்கு சென்ற போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவியிடம், செல்போன் நம்பர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி ஆகியவற்றை பிரகாஷ் வாங்கியுள்ளார். பின்னர், அடிக்கடி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் சாட் செய்து இருவருவம் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் மாணியவியை அடிக்கடி பைக்கில், வெளியே தனியாக அழைத்து சென்றுள்ளார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி பள்ளி சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி திருப்பூர் அழைத்து சென்று,
அங்கு தனியாக வீடு எடுத்து மாணவியை பிரகாஷ் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்தநிலையில் மாணவி மாயமான வழக்கு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் சென்று மாணவியை அழைத்து கொண்டு, நேற்று முன் தினம் பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். பிரகாசும் தலைமறைவாகி விட்டார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகள் முன்பு ராதாபுரம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன இளம்பெண்ணுடன் பிரகாஷிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழியில் குடும்பம் நடத்தியுள்ளார். அப்போது பிரகாஷின் கொடுமை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பிரகாஷ், இதுபோல், பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமைகள் செய்து, துரத்தி விடுவது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.