விபத்தில் 27 வயது அரவிந்தன் பலி!! 17 வயது இளைஞன் கைது!!

 முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன்கட்டுப் பகுதியில் கடந்த 10.06.2024 அன்று உந்துருளி விபத்தில் காயமடைந்த 27 அகவையுடைய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி 17.06.2024 அன்று உயிரிழந்துள்ளார்.

முத்தையன் கட்டு கூலி வேலை செய்துவந்த குறித்த குடும்பஸ்தர் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை 17 அகவையுடைய இளைஞன் ஓட்டிச்சென்ற உந்துருளி மோதியதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனை மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவினை பிறப்பிடமாக கொண்டு முள்ளியவளையில் வசிந்துவந்த 27 அகவையுடைய சிறீஸ்கந்தராசா அரவிந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய 17 அகவையுடைய இளைஞனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad